TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் (9.11.2017 – வியாழன்)

(1) தமிழ்நேசன்

உயிருடன் பிரபாகரன்!
சிவாஜிலிங்கம் தகவல்

> இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட சடலம் தலைவர் பிரபாகரனுடையது இல்லை என பல முறை பகிரங்கமாக கூறியிருந்தேன். இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

(2) மலேசிய நண்பன்

பினாங்கு வெள்ள நிவாரணம்:
புதிய நிதியை நஜீப் அறிவிக்கவில்லை!
– லிம் குவான் எங்

> பினாங்கில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் வேளையில் மாநில வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான புதிய ஒதுக்கீடுகள் எதனையும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவிக்கவில்லை என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

(3) மக்கள் ஓசை

கொடிமலை ஆலயம்
இடியும் அபாயம்!

> கொடிமலையின் வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் ஶ்ரீ அருளொளி திருமுருகன் இந்து ஆலயத்தின் பின்பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் ஆலயம் அபாயக்கட்டத்தில் உள்ளது.

(4) தமிழ் மலர்

இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டால்
ஸாக்கீர் ஒப்படைக்கப்படுவார்!

> இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஸக்கீர் நாயக் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.