TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் (16.11.2017 – வியாழக்கிழமை)

(1) தமிழ்நேசன்

போலி டத்தோ விருதுகள்
கும்பல் கைது!

> பல லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட போலி டத்தோ விருதுகளை விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை ஜொகூர் போலீசார் முறியடித்தனர். இந்த விருதுகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் 180,000 வெள்ளி மற்றும் 280,000 வெள்ளி கொடுத்திருப்பதோடு தங்களது சிறப்பு கிளப்பில் உறுப்பினர்களாக சேர்வதற்கு மேலும் 10,000 வெள்ளியையும் அங்கும்பல் வசூலித்துள்ளதாக ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காதிர் முகமட் தெரிவித்தார்.

(2) மலேசிய நண்பன்

டத்தோ மோகன் இன்று செனட்டராக பதவியேற்கிறார்!

> மஇகாவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் இன்று அதிகாரப்பூர்வமாக தனது செனட்டர் பதவியை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்.

(3) மக்கள் ஓசை

நாட்டில் 36 லட்சம் பேருக்கு நீரிழிவு:
18 லட்சம் பேர் அறியாமல் உள்ளனர்

> நாட்டின் மக்கள் தொகையான 3 கோடியே 20 லட்சம் பேரில் 36 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.

(4) தமிழ் மலர்

எனது சொத்துகளை அறிவிக்கத் தயார்

> வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தாம் முன்மொழியப்பட்டால், தமது சொத்துகளை அறிவிக்கத் தயார் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெளிவுபடுத்தினார்.

(5) தாய்மொழி

சுயத் தரவுகளை
இணையத்தில் பதிவிடாதீர்!

> இணையத்தில் சுயத் தரவுகளைத் திருடும் கும்பலிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள உண்மையான தகவல்களைப் பதிவிட வேண்டாம் என சமூக பல்லூடக அமைச்சர் டத்தோஶ்ரீ ஜைலானி ஜொஹாரி அறிவுறுத்தினார்.