TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் (18.11.2017 – சனிக்கிழமை)

(1) தமிழ்நேசன்

இந்தியர்களுக்கு 7% வேலை வாய்ப்பு:
உறுதியான அமலாக்கம்!
பணி ஓய்வு பெற்றோர் கோரிக்கை

> அரசு சேவைத் துறையில் இந்தியர்களுக்கு 7 விழுக்காடு வேலை வாய்ப்பு என்னும் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என பேராவில் அரசு சேவையிலிருந்து பணி ஓய்வு பெற்ற கருப்பையா, நடராஜா, தணிகாசலம், மனோகரன், நடராஜன் (செலாமா), சின்னப்பன், குணசேகரன், பால சுப்பிரமணியம், உதயகுமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

(2) மலேசிய நண்பன்

அன்வாரை நலம் விசாரித்தார் பிரதமர் நஜிப்!

> தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரும் நேற்று கோலாலம்பூரில் பெரிய மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

(3) மக்கள் ஓசை

விழும் ஆனால் விழாது?
அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும் தியாங்கோங் 1 விண்கலம்!

> பூமியின் வட்டப்பாதைக்கு வெளியே மிதந்து கொண்டிருக்கும் சீனாவின் அறிவியல் ஆய்வு மையத்தை உள்ளடக்கிய தியாங்கோங் 1 விண்வெளிக்கலம் உடையுமானால் அதன் சிதைந்த பகுதிகள் கோலாலம்பூரில் விழாது என அங்காசா எனப்படும் மலேசிய விண்வெளி ஆய்வுக்கழகம் அறிவித்துள்ளது.

(4) தமிழ் மலர்

சுங்கை சிப்புட் தொகுதியை தக்கவைத்துக் கொள்வது சிரமம்தான்!

> வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தாம் வகித்து வரும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி பதவியை தக்க வைத்துக் கொள்வது, தமக்கு சிரமம்தான் என மலேசிய சோஷலிச கட்சியின் (பிஎஸ்எம்) டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் கூறினார்.

(5) தாய்மொழி

50 விழுக்காடு சலுகையைப் பெற ஏமாற்று வேலை!
மை ரெப்பிட் அம்பலம்

> ரெப்பிட் கேஎல் ரயில், பேருந்து சேவை பயனர்கள், பயணக் கட்டண சலுகையைப் பெறுவதற்காக பிறரின் பயண அட்டைகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.