TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் (22.11.2017 – புதன்கிழமை)

(1) தமிழ்நேசன்

சிவராவுக்குப் பணப்பிரச்னையா?
நம்ப முடியவில்லை!

* சுங்கைப்பட்டாணி, பெர்டானா ஹைட்ஸ், அமான் ஜெயாவில் தற்கொலை செய்து கொண்ட எஸ்.சிவராவ், பணப் பிரச்னையை எதிர்நோக்கி இருந்தார் எனக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்று அவருடைய சகோதரர் லோகன்ஸ்ராவ் நேற்று கூறினார்.
* சிவராமின் பிள்ளைகளான யமுனாஶ்ரீ (வயது 8), சஸ்வின்ராவ் (வயது 6), ரகுராம்ராவ் (வயது 5) ஆகியோர் முகங்களில் தலையணையால் அழுத்தப்பட்டதால் மூச்சுத் திணரல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது.
* சிவராவ்- 3 பிள்ளைகளின் உடல்கள் நேற்று ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது அங்கிருந்தோரின் இதயங்களைப் பிழிவதாக இருந்தது.
* அன்று மகள் காமினியை இழந்தேன், இன்று மருகனையும் 3 பேரப்பிள்ளைகளையும் இழந்து தவிக்கிறேன். – புனிதா கண்ணீர்!

(2) மலேசிய நண்பன்

மீன் தலை கறி
விலை 600 வெள்ளியா!
அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

> கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இரவு உணவு உட்கொள்ள சென்ற இரண்டு குடும்பத்தினர் மீன் தலை கறிக்கு பெரும் விலை விதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

(3) மக்கள் ஓசை

50 கோடி அமானா சஹாம் பங்குகள்:
வாய்ப்பை நழுவ விடாதீர்!
இந்தியர்களுக்கு ம.இ.கா. அறிவுரை

> இந்தியர் வியூகப் பெருந்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களுக்கு வட்டியில்லா அமானா சஹாம் பங்குகள் வாங்கும் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளதை மலேசிய இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(4) தமிழ் மலர்

ஐஜிபிக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார் இந்திரா காந்தி!

> சட்டத்திற்குப் புறம்பாக பிறப்புப் பத்திரங்களை கொண்டு ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை மதம் மாற்றியதோடு இளைய மகள் பிரசன்ன டிக்சாவை கடத்திச் சென்ற ரிடுவான் என்ற பத்மநாபனை கைது செய்யுமாறு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீஸார் அவரை கைது செய்யத் தவறியதால் போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளார் பத்மநாபனின் முன்னாள் மனைவி இந்திரா காந்தி.

(5) தாய்மொழி

அவாஸ் அமைப்பு முறையில்
20 குற்றங்கள் இணைக்கப்படும்!

> நாட்டில் சாலை விபத்துகளைக் குறைக்க தானியங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு முறையில் (அவாஸ்) 20 குற்றங்கள் இணைக்கப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.