(1) தமிழ் நேசன்
படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களுக்கு
வழிகாட்டி திட்டம்
பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களுக்கான வழிகாட்டித் திட்டம் தற்போது கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு நாடு முழுவதும் அந்த வழிகாட்டித் திட்டம் அமல்படுத்தப்படும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.
(2) மலேசிய நண்பன்
மதம் மாறும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது!
சட்ட வல்லுநர் கோபால் ஸ்ரீராம் கூறுகிறார்
எந்தவொரு சமயத்தையும் சாராத மக்களின் உரிமை உட்பட சமய சுதந்திரத்தை பேணுவதற்கு அரசமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. அதே வேளையில் மதம் மாறும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று முன்னாள் கூட்டரசு நீதிபதியும் சட்ட வல்லுநருமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.
(3) மக்கள் ஓசை
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 1 கோடி ரூபாய்!
டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியம் வழங்கியது
அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இருக்கை அமைப்பதற்கு மலேசிய இந்தியர்களின் சார்பாக கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியம் 1 கோடி ரூபாய் வழங்கியது.
(4) தமிழ் மலர்
விரக்தியின் உச்சத்தில் 52 தமிழ்த் துறை பட்டதாரி ஆசிரியர்கள்!
கண்டு கொள்ளுமா கல்வி அமைச்சு?
தமிழாசியர்களாக திகழ்வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மேலும் வேரூன்றி மொழியின் அடையாளத்தில் தொடர்ந்து கால் பதிக்க வேண்டும் என தஞ்சோங் மாலிம் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2012,2013ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற 52 தமிழ்த்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கேள்விக் குறியாகிவிட்டது என அம்மாணவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
(5) தாய் மொழி
60 வயதைக் கடந்தவர்கள் எதிர்காலத் திட்டங்களை செயல்படுத்த முடியாதா?
மன்னிப்புக் கேளுங்கள் சரவணன்
60 வயதைக் கடந்தவர்கள் எதிர்காலத் திட்டங்களை வரையறுத்து அதை நோக்கி பயணிக்க முடியாது என்று கேமரன் மலையில் பேசியிருக்கும் டத்தோ சரவணனை கடுமையாக எச்சரித்த டான்ஸ்ரீ எம்.கேவியஸ், இந்தக் கூற்றுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
Add Comment