TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் – (27.11.2017 திங்கள்கிழமை)

(1) தமிழ் நேசன்

காஜாங் தமிழ்ப்பள்ளியின் தொடரும் சாதனை!

தலைநகரில் நடைபெற்ற இளம் உருமாற்றாளர்களுக்கான போட்டியில் சிலாங்கூர் மாநில காஜாங் தமிழ்ப்பள்ளி சிறப்பு விருதை வென்று தொடர் சாதனை  நிகழ்த்தியுள்ளது.

எடுத்த உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும் (Makan Sampai Habis) என்னும் செயல்திட்டம் இப்பள்ளிக்கு இவ்விருதை பெற்றுக் கொடுத்தது.

 

(2) மலேசிய நண்பன்

ஏமாற்றப்பட்ட 500,000 பேர்! 

நாட்டில், கடந்த 2015 முதல் 500,000-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோத முதலீட்டு மோசடிகளுக்கு பலியாகியுள்ளனர் என்று நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி கனி அம்பலப்படுத்தினார்.

 

(3) மக்கள் ஓசை

நஜிப்பின் கை ஓங்கியுள்ளது!

அரசியல் ஆய்வாளர்கள் கருத்து 

தலை நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்று பேசப்படும் வேளையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் கை ஓங்கியிருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

(4) தமிழ் மலர்

யார் அசல்? யார் கோப்பி கேட்?

மக்களுக்குத் தெரியும்

தலை கேமரன்மலையில் இறங்கி அனைவருக்கும் சேவை வழங்கி வரும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அசல் என்றும் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் ‘கோப்பிகேட்’ எனவும் முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர் என மைபிபிபி தேசிய தகவல் பிரிவுத் தலைவர் சைமன் சுரேஷ் கூறினார்.

 

(5) தாய்மொழி

6 லட்சத்திற்கும் மேற்பட்ட மைபிபிபி கட்சி உறுப்பினர்களின் ஆதரவு!

கேவியஸ்தான் தேமுவின் வெற்றி வேட்பாளர்

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் மட்டுமே கேமரன்மலையில் தேசிய முன்னணியின் வெற்றி வேட்பாளர். எனவே, வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் அங்குப் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குங்கள். இதுவே, மைபிபிபி கட்சியின் 600,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கோரிக்கை என கூறப்பட்டது.