(1) தமிழ்நேசன்
தே.மு.வும் மஇகாவும் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வருகின்றன!
தேசிய முன்னணியும் மஇகாவும் இந்தியர்களை மேம்படுத்த மனப்பூர்வமாகச் சிந்தித்து, பல செயல் திட்டங்களைச் செய்துவருகின்றன என மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணையமைச்சருமான செனட்டர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
(2) மலேசிய நண்பன்
விவசாயத்துறையில் இந்தியர்களுக்கு வேண்டும் சம வாய்ப்புகள்!
விவசாயத்துறையில் வேண்டியவர்களுக்கு மட்டும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் இந்திய இளைஞர்கள், அத்துறையில் இந்தியர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், போதுமான தகவல்களும் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(3) மக்கள் ஓசை
1எம்டிபி விவகாரத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை
நாட்டின் பொருளாதாரத்தில் 1எம்டிபி பிரச்சினையின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கிறது என்று நிதி அமைச்சரகம் தெரிவித்தது.
(4) தமிழ் மலர்
ஆர்ஆர்ஐயில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படும்
சிலாங்கூர் ஆர்ஆர்ஐ தோட்டத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்காக 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது என்ற தகவலை பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா அறிவித்தார்.
(5) தாய்மொழி
790,186 பேர் வெளிநாடு செல்ல தடை!
பல்வேறு குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு 790,186 பேர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment