TNR

தமிழ் நாளிதழ்கள் ஒரு கண்ணோட்டம் (12.12.2017 செவ்வாய்க்கிழமை)

(1) தமிழ் நேசன்

தைவான் அனைத்துலக கண்டுபிடிப்புப் போட்டியில்
3 தமிழ்ப்பள்ளிகள் தங்கம் வென்றன!

தைவானில் நடைபெற்ற காஹாசியுங் அனைத்துலக புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டியில் 3 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். பூச்சோங் தமிழ்ப்பள்ளி, ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் பாரு ஜாலான் யாஹ்யா அவால் ஆகிய தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கும் தங்களது பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்தனர்.

 

(2) மலேசிய நண்பன்

லஞ்சாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் :
பெர்காமோ சாவியை ஒப்படைத்தது

சுமார் வெ.71.06 மில்லியன் செலவில் நவீன புள்ளியாக கட்டப்பட்டுள்ள பகாங், லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான சாவியை பெர்காமோ நிறுவனத்தின் குத்தகையாளர் விஜேந்திரன் குப்புசாமி, கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மாட்ஸிர் காலிட்டிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

 

(3) மக்கள் ஓசை

தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த 5 கோடி ரிங்கிட்!

நாடு முழுவதும் 157 தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் தரத்தை உயர்த்த இவ்வாண்டு கல்வி அமைச்சு 5 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மாட்ஸிர் காலிட் தெரிவித்தார்.

 

(4) தமிழ் மலர்

தாய்மொழி காக்க பிரதமர் அலுவலகத்தில் டிஎல்பி ஆட்சேப மகஜர் சமர்ப்பிப்பு

மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டு வரும் இருமொழி பாடத்திட்டத்தினால் தமிழ்மொழிக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பேராபத்து ஏற்படும் என்ற அச்சுறுத்தலால் அதன் எதிர்விளைவுகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை நேற்று காலை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதாக தியாகு லோகநாதனும் தட்சணாமூர்த்தியும் தெரிவித்தனர்.

 

(5) தாய்மொழி

கேமரன்மலை வேட்பாளர் விவகாரத்தை பிரதமரிடம் விட்டு விடுகிறேன்

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களிடம் விட்டு விடுவதாக மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.