GE 14 Nation News Top News

தாப்பாவில் சரவணனுக்கு ஜெ!

தாப்பா, ஏப்.28- மஇகா வேட்பாளர்களிலேயே அதிகக் கலக்கம் இல்லாதவராக டத்தோஸ்ரீ எம். சரவணன் காணப்படுகிறார்.

தனது நிறைவான சேவையால், தாப்பா மக்களின் அபரிமித நம்பிக்கையை பெற்றிருக்கு அவர், மும்முனைப் போட்டியைச் சந்திக்கிறார்.

பாக்காத்தான் ஹாராப்பான் சார்பாக பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் சார்பில் நோராசிலி பின் மூசா போட்டியிடுகிறார்.

பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தாப்பா தொகுதியில் போட்டியிடவிருந்த ராய்ஸ் ஹுசேன் இறுதி நேரத்தில் விலகிக் முகமட் அஸ்னி தற்போது பெர்சாத்து கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.