India Nation News Top News

கலைஞர் கருணாநிதி மறைவு: மலேசியர்கள் சார்பாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர், ஆக.8-

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு, மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்ததாக, மலேசிய நாடாளுமன்ற மேலவை சபாநாயகருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து செய்தியாளரகளைச் சந்தித்த போது..

“கலைஞர் உடல் நலக் குறைவினால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்து, உடனடியாக தமிழகம் விரைந்தேன். என்னுடன் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, கட்சியின் உதவித் தலைவரும் மேலவை உறுப்பினருமான செனட்டர் டத்தோ டி.மோகன், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் வந்திருந்தனர்.

“கலைஞரை நேரில் பார்த்து, விரைவில் குணமடைய பிரார்த்தித்தோம். அவரின் புதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆறுதல் கூறினோம். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கலைஞர் அவர்கள் மறைவுற்ற செய்தி, எங்களை மீளாத் துயருற்றிருக்கச் செய்துள்ளது.

மு.க.ஸ்டாலின் அவர்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறிய போது..

“கலைஞரின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும். குறிப்பாக திமுக தொண்டர்களுக்கும் தமிழகத்தும் அவரின் மறைவு ஈடு செய்ய முடியாததாகும். கலைஞரை இழந்து துயரத்தில் இருக்கின்ற அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் மலேசிய வாழ் இந்திய சமூகத்தின் சார்பாக ஆந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.