India Nation News Top News

பிரதமர் மோடி ராஜாஜி அரங்கிற்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

சென்னை, ஆக.8-

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். அவரை  விமான நிலைத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

ராஜாஜி அரங்கத்தை வந்தடைந்தார் பிரதமர்  மோடி  அங்கு  கருணாநிதி உடலுக்கு  அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .

ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.