community news India Nation News Top News

புலிப்பாணி சித்தரின் கருவழி வாரிசு, சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அருளாசி வழங்க கோலாலம்பூர் வருகை!

சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி!  அந்த பழனி குன்றில் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலையை, போகர் எனும் சித்தர் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துவாபரயுகத்தின் முடிவில் அருள்மிகு தண்டாயுதபாணியின் நவபாஷனத்தில் விக்ரஹகம் பிரதிஷ்டை செய்த ஸ்ரீமத் போகர், தொடர்ந்து கலியுகம் 204 வரை பூஜை செய்து வந்தார். பூஜித்து வந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் போகருக்கு உறுதுணையாக இருந்த தனது சீடர் புலிப்பாணி சித்தருக்கு யோக முறைகளையும், பூசை முறைகளையும் கற்றுத் தந்தார் போகர்.

போகருக்குப் பிறகு அவரின் சீடர் புலிப்பாணி சித்தரும் அவரின் கருவழி வாரிசுதாரர்கள்தான் ஸ்ரீ தண்டாயுதக் கடவுளரைப் பூஜித்து வந்தனர். அவர்களில் இப்போதைய காலக்கட்டத்தில் அருளாசி வழங்கிக் கொண்டிருப்பவர் புலிப்பாணி சித்தரின் 13ஆவது கருவழி வாரிசுதாரர் சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்!

பழனி குன்றின் அடிவாரத்தில்  இயங்கிக்கொண்டிருக்கும் பழனி ஸ்ரீமத் போகர் புலிப்பாணி ஆசிரமம் இவருடையதே! இந்த ஆசிரமத்தில் மருத்துவம், யோக பயிற்சி, ஆன்மிக விழிப்புணர்வு, மன அமைதி தரும் பயிற்சி, தியான பயிற்சி, இயற்கை உணவு, ஞான விழிப்புணர்வு, ஜோதிட கலை விழிப்புணர்வு போன்ற சேவைகளை  சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மேற்கொண்டு வருகின்றார்.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளுக்குச் சென்று அருளுரையும் அருளாசியு வழங்கி வருகிற சுவாமிகள், இன்று கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளார்.  மலேசிய சுதந்திர தினமான நாளை 31.8.2018 வெள்ளிக்கிழமை, பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில் நடைபெறுகின்ற திருக்குட நன்நீராட்டுப் பெருவிழாவில் சுவாமிகள் கலந்து கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி வரை பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அருளாசி வழங்கும் சுவாமிகள், மறுநாள் செப்டம்பர்  2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மலாக்காவில் அருளாசி வழங்குவார். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, புலிப்பாணி சித்தரின் 13ஆவது கருவழி வாரிசுதாரர் சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளை நேரடியாகச் சந்துத்து ஆசி பெற, ஸ்ரீமத் போகர் பழனி ஆதினத்தின் அயலகக் கெளரவச் செயலாளர் ரக்க்ஷிதாவுடன் 017-3949611 எனும் அழைப்பேசி எண் வழி தொடர்பு கொள்ளலாம்.

இணையத்தளம் : www.palaniaatheenam.org / www.siddharpulippanitradition.org

முகநூல் பக்கம் (Facebook) : palani Adheenam