Nation News Top News

ஈப்போவிலுள்ள ஜப்பான் பூங்காவுக்கு புத்துயிர்! மந்திரி பெசார் நடவடிக்கை

பேரா, ஈப்போவிலுள்ள ஜப்பான் பூங்காவுக்கு புத்துயிர் அளிக்க மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக, மந்நிரி பெசார் டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு தெரிவித்தார்.

டாக்டர் ஸ்ரீனிவாசகம் பொழுதுபோக்கு பூங்காவில் அமைந்துள்ள இந்த ஜப்பான் பூங்காவை மீண்டும் சுற்றுலாத் தளமாக உருவாக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் இந்த இலக்கு குறித்து ஃபுகோகா மாநகர் மன்ற தலைவர் தாக்காஷிமா சொய்சிரோவிடம் தாம் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

இவ்விலக்கை முழுமையடைய செய்யும் வகையில், ஃபுகோகா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜப்பான் பாரம்பரிய பூங்காவுக்கு மந்நிரி பெசாரும், ஈப்போ மாநகர் மன்ற பேராளர்களும் வருகையளித்தனர்.

இந்த பூங்காவின் நிர்வாக நடைமுறை குறித்து பேராளர்கள் குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இரட்டை மாநகர் உறவுக்கு மேலும் மதிப்பளிக்கும் வகையில் , இந்த ஜப்பான் பூங்காவின் கட்டுமான பணிகளின் செலவை ஜப்பானிய அரசாங்கமே ஏற்றுக்கொண்டதை டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு சுட்டிக்காட்டினார்.

எனினும், சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தற்போது புத்துயிர் அளிக்கப்படவுள்ள இந்த பூங்காவின் பராமரிப்பு நடவடிக்கையில் முக்கியத்துவம் செலுத்துவது அவசியமென அவர் குறிப்பிட்டார்.