Political Uncategorized

வேண்டாம் பணிப் போர்! பிரதமர் எச்சரிக்கை

 

 

போர்ட்டிக்சன், ஜூலை 20-

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஏற்படும் பணிப் போரினால் நாம் அதிகாரத்தை இழக்க கூடும் என்பதை நம்பிக்கை கூட்டணியினர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்தார்.

நாட்டை மிகவும்  மோசமான முறையில் நிர்வகித்து வந்த தேசிய முன்னணியிடமிருந்து மக்கள் ஆதரவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.

ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஓராண்டில் மலேசியாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய துன் மகாதீர்  தெரிவித்தார்.

இதற்கிடையில் மோசமான அரசியல் சூழ்சிகளுக்கு முக்கியத்துவம்  அளிக்காமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் அனைவரும் இறங்க வேண்டும். கெஅடிலான் கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமக்கு பேச வாய்ப்பளித்ததற்கு டாக்டர் மகாதீர் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

இதனிடையே டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் – டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இடையிலான பணிப் போர் நாளுக்கு நாள் பரபரபை ஏற்படுத்தி வருகிறது. ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பிக் அஸ்மின் அலி பதவி விலக வேண்டும் என்று அன்வார் வலியுறுதியதை தொடர்ந்து  போர் மூண்டது. கட்சித் உறுப்பினர்கள் இரு தலைவர்களுக்கும் தங்களின் ஆதரவுகளை பரவலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இக்கூட்டத்தில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி உட்பட வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் சூராய்டா, பத்து நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தியான்சுவா, அலி பிஜூ ஆகியோர் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.