Entertainment

தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் புகைப்படங்கள்

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா புரொடக்சன்ஸ் வெளியிடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பேட்ட திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த நடிப்பில் தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில்
நயன்தாரா, பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தோமஸ் ஆகியோர்  நடித்து வருகின்றனர்.
தர்பார் திரைப்படத்தின் வெளியிடு குறித்து படக்குழு தகவல் வெளியிடாத நிலையில் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளிவரப் போகிறது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தர்பார் திரைப்பட படபிடிப்பு தளத்திலிருந்து  புகைப்படங்கள் லீக் ஆகியிருக்கும் வேளையில் படத்தின் இயக்குநர்  முருகதாஸ் அதிக குவாலிடியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதனை அதிகமாக பகிர்ந்து இணையத்தள டிரண்டிங்காக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.