Top News

போலீஸ்காரர்களும் போதைப் பொருள் உட்கொள்கின்றனர்! இவ்வாண்டு 30 பேர் கைது

 

கோலாலம்பூர், ஜூலை 29-
போதைப் பொருளுக்கு அடிமையாகி அதை உட்கொள்ளும் போலீஸ்காரர்கள் வாராவாரம் கைது செய்யப்படுகின்றனர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹமிட் பாடோர் தெரிவித்தார்.
நாட்டில் போதைப் பொருளின் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில தைரியமாக வீட்டில் வைத்து அவற்றை விற்கின்றனர்.
அதோடு போலீஸ்காரர்களே அதை உட்கொண்டு மாட்டிக் கொள்கின்றனர். இவ்வாண்டு மட்டுமே 30 போலீஸ்காரர்கள் ஷாபு வகை போதைப் பொருளை உட்கொண்டதால் பிடிப்பட்டுள்ளனர்.
அந்தளவிற்கு போதைப் பொருளின் தாக்கம் பெரியளவில் இருகிறது.
போதைப் பொருள் விநியோகத்தை துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது என்று செராஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டத்தோஶ்ரீ ஹமிட் பாடோர் கூறினார்.