Top News

கூடாரப் பிரச்சினை வெட்டுக் குத்தில் முடிந்தது! பெஸ்தாரி ஜெயாவில் பரபரப்பு

பெஸ்தாரி ஜெயா, ஆக. 5-
பெஸ்தாரி ஜெயாவில் இரு கும்பலின் வெறியாட்டத்தில் ஒருவருக்கு உள்ளங்கை துண்டானது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
கூடாரம் அமைப்பதால் ஏற்பட்ட பிரச்சினையால் இரு கும்பலுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதில் பெஸ்தாரி ஜெயா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரை அக்கும்பல் பாராங்கத்தியால் தாக்கியுள்ளனர். அவருக்கு கை பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில்  சுங்கை டாரா ஶ்ரீ காளியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் போது இரு கும்பலுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம்  தொடர்பில் 28 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துணை ஆணையர் பாட்ஸில் அகமட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பாராங்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்