Entertainment

ஆகஸ்டு 8ல் வெளிவருகிறது தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை

கோலாலம்பூர், ஆக.6-
தலா அஜித் குமார் நடிப்பில் உருவான நேர் கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு காண்கிறது.
விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படம் அவரின் ரசிகர்கர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.
ஹிந்தியில் பின்க் என்று எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை  தமிழில் நேர் கொண்ட பார்வை எனும் தலைப்பில்  இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அவருடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீனாத், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கப்பூர் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக போராடும் வழக்கறிஞராக இத்திரைப்படத்தில் வலம் வரும் அஜித்குமார் வழக்கம் போல நிறைத்துப் போன  வெள்ளை முடியுடன் காட்சியளிக்கிறார்.
இந்தியா, மலேசியா உட்பட உலகம் முழுவதும் உள்ள அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமான தினமாக ஆகஸ்டு 8ஆம் தேதி அமையவிருக்கிறது.