community news

வெற்றி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் டுரியான் விழா!

கோலாலம்பூர், ஆக. 10-
வசதி குறைந்தவர்களுக்கு உதவி வழங்கும் நல்ல நோக்கத்தில் வெற்றி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று டுரியான் விழா நடைபெறவுள்ளது.
சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்விழா நடைபெற்ற இருக்கிறது என்று அதன் தலைவர் வெற்றிவேல் தெரிவித்தார்.
பல நிகழ்ச்சிகளை நடத்தி அதன் வழி கிடைக்கப்பெறும்  பணத்தை வசதி குறைந்தவர்களுக்கு வழங்கும் உன்னத பணியை இம்மன்றம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தீபாவளிக்கு வசதி குறைந்தவர்களுக்கு உதவிகளை வழங்க இந்த டுரியான் விழா நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
இவ்விழா பல சிறப்பு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. இதன் வழி திரட்டப்படும் பணம் வசதி குறைந்த மக்களுக்கு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று வெற்றி வேல் கேட்டு கொண்டார்.