Top News

லைனஸை ‘பறயரை’ப் போல விரட்டுவதா? பிரதமர் பேச்சு

 

கோலாலம்பூர், ஆக. 26-
லைனஸ் நிறுவனத்தின் முதலீடுகளை ஏற்றுக் கொள்வதோடு அந்நிறுவனம் இங்கு இருப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பின்னர் இப்போது விரட்டச் சொன்னால் முதலீட்டாளர்களிம் நிலையை பாதிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
பிரச்னை லைனஸ்ஸிடம் இல்லை, மாறாக அதன் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகள்தான். அவை ஆபத்தை விளைவிக்குமா? இல்லையா?  என்பதைக் கண்டறிவதற்காக, நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்ததில், அவை ஆபத்தானது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிலர் லைனஸ் நிறுவனத்தை மூடவேண்டும் என்று கங்கணம் கட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

1.7 பில்லியன் முதலீட்டில், பலவிதமான 700 வேலை வாய்ப்புகள் லைனஸ் மூலம் நமக்குக் கிடைக்கும். அப்படியிருக்கையில் ‘பறையர்’களைப் போல், லைனஸை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லவது  சரியான அணுகுமுறை இல்லை. இதனால் நாட்டின் முதலீடு பாதிப்பதோடு, இனி வரும் காலங்களில் மலேசியாவில் மூதலீடு செய்ய மூதலீட்டாளர்களும் முன் வர மாட்டார்கள் என, உலகச் சுற்றுலா மாநாட்டைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடன் துன் டாக்டர் மகாதீர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதனிடையே நாட்டின் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் ‘‘பறையர்’ போல் நடத்தாதீர்’ என்ற வார்த்தையை கூறியிருப்பது  சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.