Top News

அமைச்சர் சைட் சடிக் மீது 10 மில்லியன் இழப்பீடு வழக்கு! செக்காட் எச்சரிக்கை

புத்ராஜெயா, செப். 5-
ஜாவி கல்வி கொள்கை அமலாக்க விவகாரம் தொடர்பில் தவறான வார்த்தைகளைப் பேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சடிக் மீது 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழக்கை பதிவு செய்யவிருப்பதாக செக்காட் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அருண் துரைசாமி தலைமையிலான ஜாவி கல்வி கொள்கை எதிர்ப்பு குழு அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி அமலுக்கு வருமாயின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வண்ணம் முட்டாள் தனாம ஆணவப் பேச்சு என்று சைட் சடிக் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த வார்த்தைகளை பயன்படுத்திய அமைச்சர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செக்காட் அமைப்பு வலியுறுத்தியது. ஆனால் அமைச்சரிடமிருந்து அதற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் இன்று செக்காட் அமைப்பு புத்ராஜெயாவில் உள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சிற்கு நேரடியாகச் சென்று 14 நாட்களுக்கு அமைச்சர் மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.