Entertainment Top News

நாய்கள் ரோட்ல குரைக்கும்! யாரை சொல்கிறார் சாக் ஷி? பிசுபிசுகிறது பிக் பாஸ்

சென்னை, செப். 6-
வனிதாவுடனான சண்டையில் கதறி அழுவும் ஷெரினை சமாதானப் படுத்திய சாக் ஷி அகர்வால் நாய்கள் ரோட்ல குரைக்கும் என்ற வார்த்தையை சொன்னதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தர்ஷன் உடனான உறவை பற்றி பேசிய வனிதாவிடம் பயங்கர சண்டையில் ஈடுபட்டார் ஷெரின். அப்போது அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசிய சாக் ஷி நாய்கள் ரோட்ல குரைக்கும். அதை நீ பொருட்படுத்துறீயா என்று கேட்டார்.
‘நான் வெளியே இருக்கிற மக்களை பத்தி பேசுறேன். . பேசுறவங்க பேசிட்டு போகட்டும். என்று சாக் ஷி கூறினார்.
ஷெரின்-தர்ஷன் உறவை வெளியில் மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கும் போது சாக் ஷி இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார். அவர் வனித்தாவை குறிக்கிராரா?  அல்லது மக்களை குறிக்கிராரா? என்ற சந்தேகத்துடன் பெரும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.
ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பழகி வருகின்றனர். ஆனால் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஆசை இருக்கிறது என்று வனித்தா கூறியவுடன் வெகுண்டு எழுந்த ஷெரின் வனித்தாவை வெளுத்து வாங்கி விட்டார்.
மக்களால் வெளியேற்றப்பட்ட வனித்தா மீண்டும் வீட்டிற்குள் வந்தது விருந்தினராக தான். ஆனால் அவர் வைல் கார்ட் என்ட்ரி என்று பிக் பாஸ் கூறியது அதிர்ச்சியாக இருந்தது.
இங்குள்ள ஆண்கள் எப்போதும் ஏன் பெண்களை குறி வைக்கின்றனர் என்று மதுமிதாவை உசுப்பி விட்டு அவருக்கும் ஆப்பு வைத்தார் வனித்தா.
பின்னர் மலேசிய போட்டியாளர் முகேன் ராவ் மற்றும் அபிராமிக்கு இடையில் சண்டையை மூட்டி விட்டார்.
இடையில் கவின் மற்றும் லோஸ்லியாவை பற்றி பேசி வந்தார். இடையே செண்டி மாஸ்டரையும் போட்டு தாக்கி வந்தார்.
தற்போது இறுதியாக ஷெரின் தர்ஷனை அவர் பிரித்து விட்டார். வனித்தாவின் வருகை வீட்டில் சூடுபிடிக்கும் என்ற எண்ணியவர்கள் இன்று பிசுபிசுகிறது என்று வருத்தப்படுகின்றனர்.
ஆனால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குக் உலக நாயகன் கமல் ஹாசனோ இம்முறை அவ்வளவு கண்டிப்பாக இல்லை என்பதே பெருத்த ஏமாற்றம்.
இம்முறை போட்டிகளும் பெரியளவில் இல்லை. அதிகமாக ஓய்வு நேரங்கள் இருப்பதாலே காதல், சண்டை போன்ற விஷயங்கள் நடக்கின்றன.
இரு தினங்களுக்கு சாக் ஷி, அபிராமி, மோகன் வைத்தியா ஆகியோர் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். இதில் அபிராமி பெரும் மாற்றத்துடன் காணப்படுகிறார். ஆனால் மோகன், சாக் ஷி மிக மோசமாக நடந்து கொள்கின்றனர்.
குறிப்பாக சாக் ஷி தாம் வெளியில் பார்த்த விஷயங்களை வீட்டில் சொல்லி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறார் .
பிக் பாஸ் ஒரு ரியேலிட்டி ஷோ. இது ஒரு போட்டி என்று சொன்னாலும் அந்த நிகழ்ச்சி இரு அநாகரிகத்தீன் உச்சமாக தான் பார்க்கப்படுகிறது என்று மக்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.