Fashion Top News

முக ஒப்பனை துறையில் வெற்றி நடைப் போட்டு வருகிறார் சண்ட்னிஸ் நிறுவன உரிமையாளர் சந்திரமலர்!

சந்திரமலர் சுப்ரமணியம்
கோலாலம்பூர், செப், 6-
முகம் மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதோடு அதை பாதுக்காக்கும் வழி முறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறது சண்ட்னிஸ் நிறுவனம்.
16 ஆண்டுகளாக இத்துறையில் வெற்றி நடைப் போட்டு வரும் சந்திரமலர் சுப்ரமணியம்  கல்வியில் பிந்தங்கிய இந்திய மாணவர்களுக்கு முக ஒப்பனை கலைகளை கற்றுக் கொடுத்து அவர்கள் சுயமாக வருமானத்தை ஈட்ட வழி காட்டி வருகிறார்.
பினாங்கில் பிரபல முக ஒப்பனை நிறுவனமாக சண்ட்னிஸ் திகழ்கிறது. பண்டார் பாரு ஆயிர் ஈத்தாமிலும் பினாங்கு ஸ்ரிட்டிலும் இரு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
முகத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள் , பிம்பள்ஸ், ரசாயண பொருட்களை பயன்படுத்தி முகத்தில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நிவாரணம் என 38 வகையான முக ஒப்பனை சிகிச்சைகளை சண்ட்னிஸ் நிறுவனம் வழங்குகிறது.
முக ஒப்பனை மட்டுமின்றி ஸ்பா எனப்படும் உடல் பாதுகாப்பு சேவைகளையும் சண்ட்னிஸ் வழங்கி வருகிறது. நியாயமான விலையில் இந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதாக சந்திரமலர் கூறினார்.
அண்மையில் அஜெண்டா சூரியா நிறுவனம் நடத்திய கார்னிவல் ஒன்றில் தமது நிறுவனத்தின் சேவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்பைஸ் அரேனாவில் நடைபெற்ற இந்த கார்னிவலில் அங்காடி கடை ஒன்றை அமைத்து சண்ட்னிஸ் சேவைகள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதோடு 1,500 பரிசு பற்றுச்சீட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அழகு, முக ஒப்பனை குறித்து விழிப்புணர்வும் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.
மேலும் இந்திய பெண்களுக்கு இந்த முக ஒப்பனை கலைகளை கற்றுக் கொடுத்தால் அதன் மூலம அவர்கள் வருமானத்தை ஈட்டி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கத்தில் தாம் இதை சேவையாகவே செய்து வருவதாக சந்திரமலர் கூறினார்.