Top News

அதிகரிக்கும் புகை மூட்டம்! சிலாங்கூரில் 138 பள்ளிகள் மூடப்படுகின்றன

கோலாலம்பூர், செப். 16-
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் புகை மூட்டம் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 138 பள்ளிகள் நாளை மூடப்படுவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலி தமது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட், கிள்ளான், பெட்டாலிங் பெர்டாணா ஆகிய மாவடங்களில் பள்ளிகள் மூடப்படுகின்றன.
சிப்பாங்கில் 23 பள்ளிகளும் உலு லங்காட்டில் 35 பள்ளிகளும் கோல லங்காடில் 24 பள்ளிகளும் கிள்ளானில் 24 பள்ளிகளும் பெட்டாலிங் பெர்டாணாவில் 38 பள்ளிகளும் மூடப்படுகின்றன. புகை மூட்டத்தின் ஐபியு அளவு அதிகரிப்பதால் பள்ளிகள் மூடப் படுகின்றன.
இதனால் 179,843 மாணவர்கள் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புத்ராஜெயா, ஜோகூர் ஆகிய இடங்களிலும் பள்ளிகள் மூடப் படுகின்றன. புகை மூட்டத்தின் அளவை ஆய்வு செய்த பின்னர் உடனுகுடன் தகவல் தெரிவிக்கப்படும் என்று மஸ்லீ மாலிக் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.