Entertainment Top News

இறுதி சுற்றின் முதல் போட்டியாளர் முகேன் ராவ்! வெறும் கண் துடைப்பா?

கோலாலம்பூர், செப். 22-
பிக் பாஸ் சீசன் மூன்று கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு எட்டியிருக்கும் வேளையில் முதல் இறுதிச் சுற்று போட்டியாளராக மலேசிய கலைஞர் முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல கனவுகளுடன் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முகேன் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து தற்போது உண்மையாக போட்டியை விளையாட்டி அவ்வீட்டில் நடத்தப்பட்ட 8 டாஸ்கில் அதிக புள்ளிகளை பெற்று நேரடியாக இறுதிச் சுற்று போட்டியாளராக தேர்வு பெற்றார்.
சனிக்கிழமை ஒளிப்பரப்பப்பட்ட காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் வீட்டிற்குள் வந்து முகேனின் விளையாட்டை பாராட்டி அந்த இறுதிச் சுற்றுக்கான டிக்கெட்டை வழங்கிச் சென்றார்.
வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் முகேனுக்காக மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ரசிகர் மத்தியில் ஒரு குழப்பம் நிலவிக் கொண்டே இருக்கிறது.
தொடக்கத்திலிருந்து தர்ஷனை புகழ்ந்து அவரே வெற்றியாளராவார் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால் தற்போது முகேன் ராவை தலையில் தூக்கி வைத்திருக்கிறது.
விஜய் டிவியின் சூழ்சமம் என்னவென்பதை அனைவரும் அறிவர். முகேனின் தொடர் வெற்றிகளுக்காக அவருக்கு டிக்கெட்டுகளை கொடுத்திருப்பது வெறும் கண் துடைப்பே. வெற்றியாளர் பட்டத்தை வேறு போட்டியாளருக்கு வழங்க அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கெனவே திட்டம் போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் முகேனின் அனைத்து நடவடிக்கைகளையும் பார்க்கும் போது அவரே வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று மலேசிய ரசிகர்கள் உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் விஜய் டிவியின் சூழ்ச்சி பற்றி அனைவரும் அறிந்திருப்பதால் குழப்பத்தில் இருக்கின்றனர்.