Top News

வீட்டிற்கு தீ வைத்து அரஜாகம்! அதிர்ச்சியில் அபிராமி மரணம்

புந்தோங், செப்டம்பர் 23-

புந்தோங் நியூ டில்லி சாலையில் அமைந்து ஒரு வீட்டில் ஒரு கும்பல் நுழைந்து வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தினால் வீட்டிலிருந்த அபிராமி எனும் மாது அதிர்ச்சியில் உயிரழந்தார்.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் திடிரென வீட்டின் முன் இருந்த தனது மகனின் காரை அடித்து நொறுக்கியதைக் கண்ட அபிராமி மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முடிந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணியளவில்   தனது மகனை தேடி வந்த அடையாளம் நபர்கள் வீட்டின் முன் இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். அந்த சமயத்தில் தனது அம்மாவுக் 3 தங்கைகள் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் சம்பவத்தை கண்டு அம்மா மயங்கி விழுந்து விட்டார் எனவும் தங்கை கொடுத்த தகவலினால் வீட்டிற்கு விரைந்ததாக அபிராமியின் மூத்த மகன் நினிஸ்வரன் கூறினார்.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததோடு வீட்டின் முன் இருந்த  கார் கண்ணாடிகளையும் உடைத்ததாக அவர் கூறினார்.

வீட்டிற்கு விரைந்து அம்மாவை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது அவர் உயிரிழந்த விஷயம் தெரியவந்தது. அச்சமயத்தில் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த அதே நபர்கள் வீட்டிற்கே தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம்   சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அபிராமியின் இறுதிக் காரியச் செலவுகளை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அக்குடும்பத்தினருக்கி சமூக நல இலாகா தற்காலிகமாக தங்க இடமும் இதர உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

புந்தோங்கில் வீடு தீ பிடித்து எறியும் காணொளி நேற்று இரவிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இச்சம்பவம் தொடர்பில் போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.