Top News

பேசிய பேச்சு ஆற்றோடு போச்சு!

கோலாலம்பூர், அக். 6-
மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டியை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார்.
உலக ரீதியில் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளன. அதோடு அமெரிக்கா – சீனா இடையில் வர்த்தக போர் தொடங்கியிருப்பதால் பொருளாதார நிர்ணயிக்கும் சூழலில் இல்லை.
நாட்டின் பொருளாதாரச் சுமையை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்தால் நாட்டின் கடன் சுமையை குறைக்க உதவும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து துன் மகாதீர் அவ்வாறு கூறியிருந்தார்.
பேசிய பேச்சு ஆற்றோடு போச்சு என்பது போல ஆகியவிட்டது நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகள். தேசிய முன்னணியின் ஆட்சியில் 6% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதால் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த பொது தேர்தலில் போது ஜிஎஸ்டியை ரத்து செய்வது தொடர்பான வாக்குறுதிகளையே நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் வழங்கினர். ஆனால் ஆட்சியை கைப்பற்றியதும் ஜிஎஸ்டிக்கு பதிலாக எஸ்எஸ்டியை அமல் படுத்தினர்.
தற்போது மீண்டும் ஜிஎஸ்டியை அமலுக்கு கொண்டு வந்து அவற்றை 3% வசூலிப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஜிஎஸ்டியை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான தகவல் நம்பிக்கை கூட்டணி தலைவர்களின் தலையில் இடியாய் பாய்ந்திருக்கிறது.
தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்று தெரியாமல் கண் விழி பிதிங்கி நிற்கின்றனர்.
நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வரவேற்க கூடியது தான். ஆனால் மக்களை கஷ்டப்படுத்தும் வகையில் திட்டங்கள் இருக்க கூடாது.
ஏற்கெனவே பல வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாமல் இருக்கின்றது. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டின் சொத்துகளை அந்நிய  நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளை எதிர்த்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.