Entertainment Top News

பிக் பாஸ் சீசன் 3: மலேசிய கலைஞர் முகேன் ராவ் வெற்றி பெற்றார்

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 3இன் வெற்றியாளாராக மலேசிய கலைஞர் முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் செயல்படும் விஜய் தொலைக்காட்சியின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸில் பங்கேற்க முகேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தன்னுடைய தனித் திறமை, இறக்க குணம், தன்னம்பிக்கை ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்து இன்று உலகம் போற்றும் ஒரு உயரத்திற்கு சென்றிருக்கிறார் முகேன்.
பிக் பாஸ் வீட்டில் 102 நாட்கள் வரை இருந்து பல போராட்டம், கசப்பான சம்பவங்கள், வேதனை என அனைத்தையும் தாண்டி இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
23 வயதில் இந்தளவிற்கு ஒருவர் பக்குவம் அடைந்திருக்க முடியுமா என்று பலரும் அதிர்ச்சி அடையும் வகையில் தம்முடைய வாழ்க்கை சவால்களையே வெற்றின் படிக்கட்டுளாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
நீதான் நீதான் நீ தாண்டி எனக்குள்ள என்ற தம்முடைய பாடலால் மலேசியாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தன்னகென தனி ரசிகர் பட்டாளத்தை பிக் பாஸ் வழி முகேன் உருவாக்கியிருக்கிறார்.
முகேனின் இந்த வெற்றி மலேசிய கலையுலகிற்கு கிடைத்த மகுடம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனிடையே முகேன் முதல் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட வேளையில டான்ஸ் மாஸ்டர் செண்டி இரண்டாவது நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா மூன்றாவது நிலையிலும் வெற்றி பெற்றனர்.
பிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு சரவெடி குழுவினர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.