Top News

கோமதியின் மனித நேயம் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டது

கோலாலம்பூர், அக். 8-
நிறை மாத கர்ப்பிணி பெண் வயிற்று வலியால் துடித்ததை கண்ட லான்ஸ் கார்ப்பரல் கோமதி உடனடியாக அவருக்கு உதவிக் கரம் நீட்டீ இரு உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.
டிபிஎஸ் எனப்படும் பேருந்து நிலையத்தின் போலீஸ் முகாமில் பணியில் இருந்த போது இந்தோனேசிய கர்ப்பிணி பெண் ஒருவர்  வயிற்று வலியில் துடித்ததை பார்த்த கோமதி அவருக்கு உடனடியாக உதவிக் கரம் நீட்டியிருக்கிறார்.
அங்கிருந்த டாக்சி ஒன்றில் அப்பெண்ணை ஏற்றிக் கொண்டு செராஸ் எச்யுகேஎம் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
இரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனைக்கு விரைந்து இருவரையும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்.
சிகிச்சைகளுக்கு பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையில் மறக்க முடியாத உதவியை செய்து உயிரைக் காப்பாற்றிய காவல் துறை அதிகாரி கோமதிக்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
கோமதியின் இச்செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இன வேறுபாடு இன்றி மனித நேயத்துடன் செயல்பட்ட கோமதிக்கு பாராட்டுகள்.