Top News

விடுதலை புலிகள் இயகத்திற்கு ஆதரவா? ஜசெகவைச் சேர்ந்த சாமிநாதன், குணா கைது!

கோலாலம்பூர், அக். 10-
விடுதலை புலிகள் இயகத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்று ஜசெகாவைச் சேர்ந்த
மலாக்கா மாநில  ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பி.குணா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை சாமிநாதன் வீட்டில் அதிரடியாக இறங்கிய போலீஸார் அவரை வீட்டிலிருந்தே கைது செய்துள்ளனர். அதே சமயம் நெகிரியில் குணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயுன் கான் மைதின் பிச்சை இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
பினாங்கு மாநில  துணை முதல்வர் பி.ராமசாமி, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஆகியோர் மீதே அடுத்த இலக்கு என்று கூறப்படுகிறது.